மேடை நிகழ்ச்சியில் பின்னணி பாடகிக்கு துப்பாக்கிச் சூடு… திரையுலகினர் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Friday,June 02 2023]

மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போஜ்பூரி பின்னணி பாடகி மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து விட்டதாகவும் அதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இச்சம்பவம் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலத்திலுள்ள சப்ரா எனும் இடத்தில் தனியார் மேடை நிழ்க்ச்சி ஒன்று நடத்தப்பட்டபோது அங்கு கொண்டாட்டத்திற்காக துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் போஜ்பூரி மொழியில் பாடிவரும் பின்னணி பாடகி நிஷா உபாத்யாய் கலந்துகொண்ட நிலையில் அவருடைய இடது தொடையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பின்னணி பாடகி தற்போது பாட்னாவிலுள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய போலீசார், ஜனதா பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செந்துவார் எனும் பகுதியில் தனியார் மேடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் அங்கு கொண்டாட்டத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

ஆனால் தற்போது பாடகி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இதுகுறித்து யாரும் வழக்குத் தொடுக்கவில்லை என்ற போலீசார் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பின்னணி பாடகி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த விவகாரம் குறித்து பேசிய கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜிதேந்திர குமார் ராய், கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்துவது கிரிமினல் குற்றம் என்றும் இதை மன்னிக்கவே முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More News

கழுத்தைச் சுற்றிய மலைபாம்பு? கமல்ஹாசன் பட நடிகையின் கெத்தான புகைப்படம் வைரல்!

பாலிவுட் மற்றும் ஒருசில தென்னிந்திய திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் தன்னுடைய கழுத்தில் மலைப்பாம்பை சுற்றிக் கொண்டிருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் வெற்றிக்கு பிறகு எம்.எஸ்.தோனிக்கு அறுவைசிகிச்சை? பதட்டத்தில் ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மகேந்திர சிங் தோனி ஐபிஎல் வெற்றிக்குப் பிறகு தனது இடது முழங்காலில் அறுவைசிகிச்சை செய்துகொண்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

தோல், முடி பிரச்சனைக்கு வைட்டமின் 'இ' மாத்திரைகள் நல்லதா? மருத்துவர்கள் விளக்கம்!

அழகான சருமத்திற்கும் அடர்த்தியான கேசத்திற்கு வைட்டமின் ‘இ’ மாத்திரைகளைப் பயன்படுத்துங்கள் என்பது போன்ற பரிந்துரைகள் சமூகவலைத் தளத்தில் அதிகரித்து விட்டன.

அழகாக இருந்தால் போதாது, அறிவும் இருக்க வேண்டும்: கீர்த்தி சுரேஷ் குறித்து கமல்ஹாசன்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான 'மாமன்னன்' திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் உலக நாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக

'மாமன்னன்' இசை வெளியீடு: 'தங்கலான்', 'சார்பாட்டா பரம்பரை 2' அப்டேட் கொடுத்த பா ரஞ்சித்..!

'மாமன்னன்' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பா. ரஞ்சித்,  'தங்கலான்', மற்றும் 'சார்பாட்டா பரம்பரை 2'  படங்கள் குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளார்