close
Choose your channels

தயாரிப்பாளரே வெளியிட்ட நடிகையின் ஆபாச வீடியோ: திரையுலகினர் அதிர்ச்சி

Tuesday, April 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது படத்தில் நடித்த நடிகையின் ஆபாச படத்தை அந்த படத்தின் தயாரிப்பாளரே வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று போஜ்புரி திரையுலகில் நடந்துள்ளதால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உபேந்திரவர்மா என்ற 29 வயது போஜ்புரி பட தயாரிப்பாளர் ஒரு நடிகையை தனது குறும்படத்தில் நடிக்க வைத்தார். அந்த குறும்படத்தின் ஒரு காட்சியில் நடிகை துண்டு மட்டும் கட்டி வரும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த காட்சி படமாக்கப்படும்போது திடீரென நடிகையின் துண்டு நழுவி விழுந்தது. துண்டு நழுவிய  காட்சியும் படமாகிவிட்டதால் அதிர்ச்சி அடைந்த அந்த நடிகை, அந்த காட்சியை உடனே நீக்குமாறு தயாரிப்பாளரிடம் கேட்டு கொண்டார். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் உபேந்திரவர்மா தனது குறும்படத்தில் அந்த காட்சியை நீக்கிவிட்டாலும் தனியாக அந்த காட்சியை யூடியூபில் பதிவு செய்துவிட்டார். இந்த காட்சியை ஏராளமானோர் பார்த்தது மட்டுமின்றி ஒருசிலர் ஆபாச இணையதளங்களிலும் அப்லோடு செய்திருந்தனர்.

இதுகுறித்து தனது தோழிகளின் மூலம் கேள்விப்பட்ட அந்த நடிகை தயாரிப்பாளர் உபேந்திரவர்மா மீது போலீசில் புகார் அளித்தார். போலீஸ் தன்னை தேடுவதை அறிந்த உபேந்திரவர்மா, கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment