பிரபல நடிகைக்கு தபாலில் 'தலாக்' அனுப்பிய கணவர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய பாராளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு சற்றுமுன் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகை ஒருவருக்கு தபால் மூலம் அவரது கணவர் முத்தலாக் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரபல போஜ்புரி நடிகை அலினா ஷேக். இவருக்கும் அப்துல்லா என்பவருக்கும் திருமணமாகி கடந்த ஆறு மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் திடீரென அப்துல்ல்லா மாயமானார். கணவரை காணாமல் கவலையுடன் இருந்த அலினா, இதுகுறித்து போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் அலினாவுக்கு ஒரு தபால் வந்தது. அதனை பிரித்து பார்த்த அலினா அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். அந்த தபாலில் அலினாவின் கணவர் அப்துல்லா 'முத்தலாக்' என்ற விவாகரத்தை அனுப்பியிருந்தார். இதுகுறித்து மீண்டும் காவல்துறையினர்களிடம் அலினா புகார் செய்துள்ளார். முத்தலாக் தடை சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தபாலில் பிரபல நடிகை ஒருவருக்கு அவரது கணவர் முத்தலாக் அனுப்பியுள்ளது போஜ்புரி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout