செல்போனில் முத்தலாக் கொடுத்த கணவர்… அதிர்ச்சி சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியைப் பிரிய நினைத்த கணவர் ஒருவர் செல்போனில் முத்தலாக் சொல்லிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு, மத ரீதியாக முத்தலாக் சொல்லும் நடைமுறைக்கு எதிராக தடைச்சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மகராஷ்டிரம் மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த 21 வயதுள்ள பெண் ஒருவர், செல்போன் மூலம் தனது கணவர் முத்தலாக் சொல்லியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் கணவர் தன்னை தாக்கி, வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாகப் புகார் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு சமூகநல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தப் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments