பாரா ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த சில நாட்களாக பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் உள்பட உலகம் முழுவதும் இருந்து பல நாடுகளின் வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல் அவர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் என்பதை பார்த்தோம். இதனை அடுத்து இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நான்கு சுற்றுகள் கொண்ட இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல் மற்றும் சீன வீராங்கனை சூயிங் ஆகிய இருவரும் மோதினர். இந்த போட்டியில் சீன வீராங்கனை 3-0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல் அவர்களை வீழ்த்தி தங்கம் வென்றார்.

இதனையடுத்து தோல்வியடைந்த இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று சாதனை செய்த பவினாபென் பட்டேல்அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் டோக்கியோ டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.