சென்னை வந்தது பவதாரிணி உடல்.. பண்ணைபுரத்திற்கு எடுத்து செல்லப்படுகிறதா?

  • IndiaGlitz, [Friday,January 26 2024]

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் சற்று முன் இலங்கையிலிருந்து சென்னை வந்ததாகவும் சென்னை தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புற்று நோய்க்கு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இலங்கையில் அவருடைய உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் பவதாரிணி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் விமான நிலைய நடைமுறைக்கு பின்னர் பவதாரிணி உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜா இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பவதாரிணி உடல் சென்னை வந்துள்ளதையடுத்து திரையுலக பிரபலங்கள் இளையராஜாவின் இல்லத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இளையராஜாவின் இல்லத்தில் உள்ள பவதாரிணி உடல் நாளை இறுதி சடங்கு செய்வதற்காக சொந்த ஊரான தேனி பண்ணைபுரத்திற்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது.