அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. பாவனா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டது தெரிந்ததே. பாவனா கடத்தப்பட்டு ஆபாசமாக வீடியோ எடுக்கப்பட்டார் என்பதுதான் இந்த வழக்கின் முக்கிய குற்றமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டதற்காக காவல்துறையினர்களுக்கு பாவனா, நன்றி கூறுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்து பாவனா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
திலீப் கைது நடவடிக்கைக்கு பின்னர் போலீசாருக்கு நான் நன்றி தெரிவிப்பது போல சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள வீடியோ போலியானது. இதுபோன்ற செயல்கள் மக்கள் மற்றும் மீடியாவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் திலீப்புடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்ததாக இணையதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் தவறானது என்றும், திலீப்புடன் பல படங்களில் நடித்திருந்தாலும் எங்களுக்குள் ஒருசில பிரச்சனைகள் ஏற்பட்ட பின்னர் இருவரும் நட்பில் இருந்து விலகிவிட்டோம் என்றும் பாவனா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout