'பாரதி கண்ணம்மா' நடிகையின் முதல் அன்னையர் தினம்: மாஸ் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Sunday,May 08 2022]

ஒவ்வொரு ஆண்டு மே 8ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய அன்னையருடன் கூடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அன்னையர் தினத்தை கொண்டாடி வருகின்றனர் .

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லியாக நடித்துள்ள ஃபரீனா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா என்ற வில்லி கேரக்டரில் கலக்கலாக நடித்து வந்த ஃபரீனா சமீபத்தில் கர்ப்பம் ஆனார். அவர் கர்ப்பமாக இருக்கும் போதே பல்வேறு புகைப்பட போட்டோ ஷூட்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார் என்பதும் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது தெரிந்ததே .

ஃபரீனாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் இந்த குழந்தையின் புகைப்படத்தை அன்னையர் தினத்தில் பகிர்ந்துள்ளார். இந்த மாஸ் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த பதிவில் ஃபரினா கூறியதாவது: அனைத்து புதிய தாய்மார்களுக்கும் எனது முதலாவது அன்னையர் தின வாழ்த்துக்கள்! ஒரு தாயாக இருப்பது மிகவும் கடினம் என்பதை நான் அறிவேன், நாங்கள் அதை மிகவும் சிரமமின்றி பார்க்கிறோம்! நம் அனைவருக்கும் பெருமை! எங்கள் புதிய உணர்வு, புதிய காதல் மற்றும் இன்னும் நிறைய அனுபவம் மற்றும் உற்சாகத்திற்கு வாழ்த்துக்கள்! என்று பதிவு செய்துள்ளார்.