சென்று வா.. செந்நிறத் தோழனே: எஸ்பி ஜனநாதன் மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்!

பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அவர் கவலைகிடமாக இருப்பதாக வெளிவந்த செய்தியால் திரையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியது. இந்த நிலையில் சற்றுமுன் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் காலமானார் என்று வெளியான செய்தியை பார்த்தோம்.

இதனை அடுத்து தமிழ் திரையுலகினர் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். எஸ்பி ஜனநாதன் அவர்களின் மறைவு திரையுலகின் மிகப் பெரிய இழப்பு என்று பெரும்பாலான திரையுலகினர் கருத்து கூறி வரும் நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது டுவிட்டரில் சென்று வா செந்நிறத் தோழனே என்று கவிதை வடிவில் ஒரு இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நம்பிக்கையும்..
பிரார்த்தனைகளும்..
கை நழுவிச் சென்றாலும்
இயற்கை அன்னை 
ஒரு போதும் கைவிடாது
உன்னைத் தழுவிக்
கொள்ளும்..
சென்று வா..
செந்நிறத் தோழனே.

பாரதிராஜா.