close
Choose your channels

தள்ளி போகிறதா பாரதிராஜாவின் 'குற்றப்பரம்பரை'?

Thursday, July 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல எழுத்தாளர் வேலராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' படத்தை இயக்கவுள்ளதாக வந்த செய்தியையும், இதற்கான பூஜையும் பிரமாண்டமாக நடைபெற்றதையும் ஏற்கனவே பார்த்தோம். மேலும் இதே 'குற்றப்பரம்பரை' கதையை இயக்குனர் பாலாவும் இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்திக்கு பாரதிராஜா கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி பாரதிராஜா 'குற்றப்பரம்பரை' படத்திற்கு முன்னதாக ஒரு காதல் படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்த படம் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவலை பாரதிராஜா தரப்பினர் மறுத்துள்ளனர். இந்த படம் முற்றிலும் புதிய ஸ்கிரிப்ட் என்றும் இது எந்த படத்தின் இரண்டாவது பாகமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த படத்தில் நாயகன் வேடத்தில் நடிக்க பிரபல இயக்குனர் வசந்த் மகன் மற்றும் விக்ரம் உறவினர் ஒருவரும் பரிசீலனையில் உள்ளனர். பாரதிராஜாவும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பார் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment