உனக்கான காலம் வெகுதூரம் இல்லை: சீமானுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல் கட்சி தலைவருமான சீமான் தனது 53வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அவரது கட்சி தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சீமான் தனது திரையுலக குருவாகவும் அன்பாக ‘அப்பா’ என்று அழைப்பவருமான இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் சீமானுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து டுவிட்டில் கூறியிருப்பதாவது:
உனக்கான காலம் வெகுதூரம் இல்லை. எதற்கும் ஆரம்பம், முடிவு என்று காலம் அமையும். தமிழ் இனத்துக்கான உன் போரட்டம் ஆரம்பித்து வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சிலநாட்களில் தமிழ் இனத்துக்கான உன் போரட்டத்தின் முடிவும் தமிழகத்திற்கு சாதகமாக அமையும் என்று கூறியுள்ளார். பாரதிராஜாவின் இந்த பதிவிற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்துள்ளது.
உனக்கான காலம் வெகுதூரம் இல்லை.எதற்கும் ஆரம்பம்,முடிவு என்று காலம்அமையும்.தமிழ்இனத்துக்கான உன் போரட்டம் ஆரம்பித்துவெற்றியைநோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.
— Bharathiraja (@offBharathiraja) November 8, 2019
இன்னும் சிலநாட்களில் தமிழ்இனத்துக்கான உன் போரட்டத்தின் முடிவும் தமிழகத்திற்கு சாதகமாக அமையும்.@SeemanOfficial #HBDSeeman pic.twitter.com/YTblIqBL0j
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments