விஷால் பாணியில் தந்தையை செலக்ட் செய்த விதார்த்

  • IndiaGlitz, [Friday,September 11 2015]

கடந்த 2013ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கிய 'பாண்டியநாடு' படத்தில் விஷாலின் தந்தையாக மிக இயல்பாக தனது நடிப்பை வெளிப்படுத்திய இயக்குனர் இமயம் பாரதிராஜா, மீண்டும் இன்னொரு நடிகருக்கு தந்தையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மைனா, காடு, வீரம் போன்ற படங்களில் நடித்த விதார்த், ஹீரோவாக நடிக்கும் இன்னும் பெயர் வைக்கப்படாத திரைப்படம் ஒன்றினை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட 'நாளைய இயக்குனர்' என்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகிலன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விதார்த்துக்கு தந்தையாக அதே நேரத்தில் இதுவரை நடிக்காத முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் பாரதிராஜா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 'பாண்டியநாடு' படத்தை போலவே இந்த படமும் அவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்து விதார்த், உலா, விழித்திரு, குற்றமும் தண்டனையும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்..

More News

'தல 56' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று ஆரம்பம்?

வீரம்' சிவா இயக்கி வரும் அஜீத்தின் 'தல 56' திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் வசனக்காட்சிகளின்...

பாலிவுட்டில் பார்வையில் ஆர்யாவின் 'யட்சன்'

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' படத்தை ரீமேக் செய்ய பாலிவுட்டில் சல்மான்கானும்...

புலி' படத்தில் விஜய்யின் 3 முக்கிய வேடங்கள்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் விறுவிறுப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன...

'விஜய் 59' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அட்லி

இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் கதை, கடந்த 1990ஆம் ஆண்டு ...

உலகப்புகழ் பெற்ற விவிஐபி உடன் நடிகை ஸ்ரேயா

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'சிவாஜி', விஜய்யுடன் 'அழகிய தமிழ் மகன்', தனுஷுடன் 'திருவிளையாடல் ஆரம்பம்'...