கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்: திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாரதிராஜா எச்சரிக்கை

  • IndiaGlitz, [Monday,October 14 2019]

சுரேஷ் காமாட்சி இயக்கிய 'மிக மிக அவசரம்' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் திடீரென திரையரங்குகள் கிடைக்காததால் வெளியாகவில்லை. இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்களின் இந்த போக்கினை ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கம் கண்டித்துள்ள நிலையில் தற்போது இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜாவும் காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சமீப காலத்தில் நான் பார்த்து ரசித்த திரைப்படம், சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கியுள்ள ’மிக மிக அவசரம்’. பெண்களின் கொடுந்துயர் ஒன்றினை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் படம். 'சமுதாயத்துக்குத் தேவையான இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்' என்று அமைச்சர் பெருமக்கள், காவல்துறை அதிகாரிகள், பெண் ஆளுமைகள் எனப் பலர் நெகிழ்ந்து பாராட்டிய படம்.

கடந்த 11-ம் தேதி மிக மிக அவசரம்' திரைப்படம் வெளியாவதாக இருந்தது. அதற்கு முன் மூன்று வாரங்களுக்கு 85 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து தொடர்ந்து விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால், படம் வெளியாகும் முதல் நாள் இரவு 17 காட்சிகள் தான் திரையிட முடியும் என்று கூறிவிட்டனர் திரையரங்க உரிமையாளர்கள். காரணம் அதே நாளில் வேறு படம் வருகிறதாம். அதற்கு அதிக திரையரங்குகளை ஒதுக்குவோம் என்று கூறிவிட்டனர். பத்துமாதம் சுமந்து பல வலிகளைத் தாங்கி பிரசவிக்கும் நேரம், பெண்ணின் வயிற்றில் கட்டையால் அடிப்பது போன்ற கொடூரச் செயல் இது.

மக்கள் எந்த படத்தைப் பார்க்க வேண்டும் என்பதை யாரோ சிலர் தீர்மானிப்பது முறையல்ல. தவிர எந்தவொரு தொழிலாக இருந்தாலும் அதன் நெறிமுறைகளுக்கு வாக்குக்குக் கட்டுப்பட்டு நடப்பதே அனைவருக்கும் நல்லது. திரையரங்க உரிமையாளர்கள் இதேபோக்கைத் தொடர்ந்தால், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

திரைத்துறையினரிடம் அக்கறையும் பாசமும் கொண்ட தமிழக முதல்வர் அவர்கள், இது போன்ற சிறுபட்ஜெட் படங்களுக்கு மீண்டும் பிரச்சினை வராமல் இருக்க நல்லதொரு தீர்வு கிடைக்கச் செய்ய வேண்டும்

இவ்வாறு பாரதிராஜாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 

More News

இதை டிரெண்ட் பண்ணலாமா? தல, தளபதி ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள்

காமெடி நடிகர் விவேக் தனது திரைப்படங்களில் காமெடி மட்டுமின்றி முடிந்த அளவு சமூக கருத்துக்களை தெரிவித்து வருபவர் என்பது தெரிந்ததே. மூடநம்பிக்கை ஒழிப்பு உள்பட பல விஷயங்களை அவர் தனது காமெடி மூலம் மக்களுக்கு புரியும்படி கூறி வருகிறார். 

ஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்

வாட்ஸ்அப் இணையதளங்களில் உரையாடும்போது பெண்கள் எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என காவல் துறையினர் அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர்.

'பிகில்' டிரைலரை பார்த்து அட்லியிடம் கேள்வி எழுப்பிய ஹாலிவுட் இயக்குனர்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

'தளபதி 64' குறித்த வதந்தி: தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் தற்போது அவர் 'தளபதி 64' என்ற படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார் 

ஆம்பள ஆம்பள என ஊளையிடுவதை தட்டி கொடுப்பதா? கஸ்தூரி கண்டனம்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும் இந்த நிகழ்ச்சியின் சில முக்கிய வீடியோக்களை அவ்வபோது விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றது.