மீண்டு வருவான், காத்திருக்கின்றேன்: எஸ்பிபி குறித்து பிரபல இயக்குனர்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக சற்றுமுன் தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானவுடன் கோலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியது.

தமிழ் திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி இந்திய திரையுலகமே எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், இயக்குனர் இமயமுமான பாரதிராஜா அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’பாலு, மீண்டு வருவான் காத்திருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறித்து மேலும் கூறியதாவது:

என் நண்பன்

பாலு,
தன்னம்பிக்கையானவன்..
வலிமையானவன்..
அவன் தொழும் தெய்வங்களும்
நான் வணங்கும்
இயற்கையும்
அவனை உயிர்ப்பிக்கும்..
மீண்டு வருவான்
காத்திருக்கிறேன்.

அன்புடன்
பாரதிராஜா