தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய பாரதிராஜா: காரணம் இதுதான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் திறக்க தமிழக அரசு அனுமதித்தது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகள் இன்று திறக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா அவர்கள் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் நன்றிகள்! வணக்கம்.
'கடந்த இரண்டு ஆண்டுகளை திரையுலகின் கருப்பு நாட்களாகிவிட்டது இந்த கொரானா. படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள் வெளியீடு என எல்லாம் பெருமளவில் முடங்கிவிட்டது. நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக் குறியோடு நகர்ந்த நாட்களில் இப்போது திரையரங்குகளை 29.8.2021 முதல் 50% இருக்கைகளோடு திறந்துகொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் விதைக்கிறது.
ஆக்கிரமித்து இருக்கும் நோய் விலகி, பல புதிய திரைப்படங்கள் வெளியாக, திரையரங்குகள் முழுமையான திருவிழாக் கோலம் காண காத்திருக்கிறோம்.
'திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த ஒரு அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout