தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய இயக்குனர் பாரதிராஜா!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கும் நன்றி தெரிவித்து இயக்குநர் இமயம் பாரதிராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:

இந்த கொரோனாவின் பிடியிலே பல்வேறு தொழில்கள் முடங்கி போயுள்ளது. அதில் தமிழ் திரைப்பட உலகமும் ஒன்று. இதேபோல் பல தொழில்களை பாதித்து பல தொழிலாளர்கள் மிகவும் கஷ்ட நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மூலமாக நாங்கள் சில வேண்டுகோளை தமிழக அரசுக்கு விடுத்தோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்ய ஊரடங்கு விதிகளை தளர்த்தி அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டோம். அதற்கு செவிசாய்த்து பெருந்தன்மையுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களும் சில விதிகளை தளர்த்தி போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் பண்ணலாம் என்று சில கட்டுப்பாடுகளையும் கூறி சில விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு செய்ய வேண்டும் என்று சில விதிகளை கூறியுள்ளார்கள்.

இதன் மூலம் தமிழ் திரையுலகை காப்பாற்றியதற்கு காரணமாக இருந்த தமிழக முதலமைச்சர், தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நன்றிக்கடன் பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இயக்குனர் பாரதிராஜா தனது நன்றியை தெரிவித்துள்ளார்.