சூர்யா நம் வீட்டு பிள்ளை: ஓடிடி முடிவுக்கு பாரதிராஜா ஆதரவு: 

நடிகர் சூர்யா, தான் நடித்து தயாரித்த ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்ததை அடுத்து அவரது முடிவுக்கு திரையுலகினர் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ’சூர்யா நம் வீட்டுப் பிள்ளை அவரது முடிவை எதிர்க்க வேண்டாம்’ என இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் அறிக்கை ஒன்றின் மூலம் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சூர்யா மற்றும் பெரிய நடிகர்கள் படங்கள் ஓடிடியில் வரக்கூடாது, திரையில் தான் வரவேண்டும் என்கிற உங்கள் எண்ணம் வரவேற்கக் கூடிய ஒன்றுதான். அதே நேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதை திரையில் கொண்டுவர முன் வருவீர்களா? போராடுவீர்களா?

தயாரிப்புகளிலும் சுதந்திரம் வேண்டும். கட்டுப்படுத்த நினைக்க கூடாது. என் நண்பர் சிவகுமார் அவர்களின் வளர்ப்பும், வாழ்வியல் முறையும் பார்த்து கர்வப்பட்டுள்ளேன். சூர்யா, கார்த்தி இருவரும் என் வீட்டு முற்றத்தில் வளர்ந்தவர்கள். அவர்களின் மனிதநேயப் பண்பும் நேர்மையும் ஒழுக்கமும் நான் நன்கு அறிவேன். இவர்கள் தமிழ்த் திரைக்கு கிடைத்த பொக்கிஷங்கள். இவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள். பெருமைப்படுங்கள், இவர்களை மட்டுமல்ல எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள். மனம் வலிக்கிறது. இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம்.

தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்தால்தான் இதை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வு செழிக்கும். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே, வாருங்கள், பேசித் தீர்ப்போம். ஒற்றுமையுடன் செயல் படுவோம். கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படத்தை காண ஓடிடியில் சிறந்த தளமாக இருக்கும் என்கிற நல்லெண்ணத்தில் சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கக் கூடியது ஆகும்.

ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள சுதா கொங்காரா இயக்கியுள்ள ‘சூரரை போற்று’ திரைப்படத்தில் சூர்யா மிரட்டியுள்ளார். சூரரைப்போற்று திரைமுன்னோட்டம் பார்த்து வியந்தேன். இந்த திரைப்படம் தமிழ் திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் சூரரைப்போற்று முத்திரை பதிக்கும்.

இவ்வாறு பாரதிராஜா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More News

தொலைக்காட்சி வழியே கல்வி… கொரோனா காலத்தில் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கும் தமிழக அரசு!!!

கொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் பிரபல நடிகைமீது துப்பாக்கிச் சூடு!!! பரபரப்பான பின்னணி!!!

கடந்த சில தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரபல நடிகை ஒருவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

அசால்ட்டாக வேனில் வைத்து 50 மூட்டை குட்கா கடத்தல்!!! சோதனையில் பறிமுதல்!!!

வேலூர் பகுதியில் 50 மூட்டை குட்காவை வேனில் வைத்துக் கடத்தியதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. வேலூர் மாவட்டம்

1,100 ஆண்டு பழமையான தங்கப்புதையல்!!! மகிழ்ச்சியில் தொல்லியல் துறை!!!

இஸ்ரேல் நாட்டில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட 1,100 ஆண்டுகால பழமையான தங்கப்புதையல் ஒன்றை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்து உள்ளார்

பிக்பாஸ் தர்ஷனின் முதல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு: நாளை டீசர் வெளியீடு!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் என்பவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது