மிகப்பெரிய போராடம் வெடிக்கும்: தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாரதிராஜா எச்சரிக்கை

  • IndiaGlitz, [Wednesday,May 29 2019]

திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய சதவிகித கணக்கு நேற்று வெளியான நிலையில் இந்த திட்டத்திற்கு பாரதிராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்த விகிதாச்சார முறை அமலுக்கு வந்தால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் அடியோடு அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லை என்றாலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு குழு இருப்பதாகவும், அந்த குழுவுடன் ஆலோசித்து எந்த ஒரு முடிவையும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எடுக்க வேண்டும் என்றும் பாரதிராஜா கூறியுள்ளார்.

மேலும் எல்லாவற்றையும் மீறி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டால் இந்த முடிவுகளை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்' என்று பாரதிராஜா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

More News

முதலமைச்சர் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆர்வம்: சூர்யா

ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன்மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். 

நிருபரிடம் சாதி பெயரை கேட்ட கிருஷ்ணசாமிக்கு அன்புமணி ஆதரவா?

சென்னையில் நேற்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணாமி செய்தியாளர்களை சந்தித்தபோது நிருபர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

என்னை விட்டுட்டு போயிட்டாங்கப்பா: உலகக்கோப்பை டீமை திட்டிய நடிகர்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் இங்கிலாந்து நாட்டில் தொடங்கவுள்ள நிலையில் கடந்த 1983ஆம் ஆண்டு முதல்முறையாக கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் கோப்பையை வென்றது

மோடி பதவியேற்பு விழாவுக்கு கமலுக்கு அழைப்பு இல்லையா?

இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நாளை பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசை குறைகூறாமல் அதிரடியில் இறங்கிய ரஜினி மன்றத்தினர்

எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அரசை குறை கூறிக்கொண்டு, போராட்டம் நடத்தி, மக்களின் கவனத்தை பெற்று, தங்களுக்கும் தங்களது கட்சிக்கும் விளம்பரம் தேடி கொண்டிருப்பவர்களின்