ரசிகர்களை முட்டாளாக்கி வச்சிருக்கோம்: பாரதிராஜா
- IndiaGlitz, [Monday,April 30 2018]
பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த சில மாதங்களாக ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று நடைபெற்ற 'காட்டுப்பய சார் இந்த காளி' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாரதிராஜா, ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசினார். அவர் இந்த விழாவில் பேசியதாவது:
“தற்போது வெளியாகும் பெரும்பாலான தலைப்புகளில் எனக்கு உடன்பாடில்லை. ‘காட்டுப்பய சார் காளி’ என்பதைவிட, ‘கண்ணியமான காளி’ என்று வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
‘காட்டுப்பய காளி’ என்று டயலாக் பேசியவர்தான் இன்று நாட்டை ஆளணும் என்கிறார். நாமே ஒரு படம் கொடுத்து, வசனம் சொல்லிக் கொடுத்து, பாட்டு சொல்லிக் கொடுத்து, ‘ஆ... ஊ..’ன்னு கத்தவிட்டு, கையில் ரெண்டு செயின் கொடுத்து, மக்களை முட்டாளாக்கி... கடைசியில் நாட்டை ஆளணும்னு வந்துடுறீங்க.
ரசிகன் பாவம்... விவரம்கெட்ட பய. இன்னும் பாருங்க முட்டாளாக்கி வச்சிருக்கோம். பாலாபிஷேகம் பண்ணும்போது அவர் தடுத்து நிறுத்தியிருக்கணும். ‘கட் அவுட்டுக்கு மாலை கூடாது, கண்ணியமாகப் படம் பார்’ என்று சொல்லியிருந்தால் பேசாமல் இருந்திருப்பார்கள்.
ரசிகனைக் கெளப்பிவிட்டு, மேக்ஸிமம் முட்டாளாக்கிவிட்டு... ‘இப்ப நான் வரேன்’னா அவன் என்ன பண்ணுவான்? ‘வா... வா...’ன்னு தான் கூப்பிடுவான். ரொம்பக் கேவலமான ஒரு சூழ்நிலை. சினிமாவில் இருந்துக்கிட்டு நானே இதெல்லாம் பேச வேண்டியிருக்கு
இவ்வாறு பாரதிராஜா பேசினார்