ஆடு நனைகிறதே என ஓநாய் அழுகிறது: விபிஎப் கட்டணத்தை ஏற்ற க்யுப் குறித்து பாரதிராஜா!

விபிஎப் விவகாரம் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே இருக்கும் நிலையில் திடீரென கியூப் நிறுவனம் நவம்பர் மாதம் முழுவதும் வெளியாகும் திரைப்படங்களுக்கான விபிஎப் கட்டணத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது

இதனை அடுத்து தற்காலிகமாக இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நவம்பர் மாதத்திற்குள் இதுகுறித்து தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு ஒரு முடிவு காண வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா தனது அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: திரைப் படங்கள் தயாரிப்பதே வெளியிடுவதற்குதான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்களின் நலனுக்குத்தான். விபிஎப் சம்பந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் ’ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத’ கதையாக டிஜிட்டல் புரஜொக்சன் நிறுவனங்கள் திடீரென தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு விபிஎப் கட்டணம் இல்லை என அறிவித்திருக்கிறது. நல்லது

திரையரங்குகள் உடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவிவரும் நிலையில் தயாரிப்பாளர்களையோ, திரையரங்க உரிமையாளர்களையோ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியை டிஜிட்டல் நிறுவனங்கள் விபிஎப் கட்டணத்தை விலக்கி இருந்தாலும் அது இரண்டு வாரங்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி விபிஎப் கட்டணமில்லாத இந்த இரண்டு வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளோம்

அதேசமயம் விபிஎப் கட்டி திரைப்படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதில் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி’ என்று கூறியுள்ளார். பாரதிராஜாவின் இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது