விஷால் நாகரீகம் தெரிந்தவராக இருந்தால்... பாரதிராஜா ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தற்போது தமிழக அரசின் தனி அதிகாரி கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் சமீபத்தில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் ஜூன் மாதத்திற்குள் தேர்தல் நடைபெற வேண்டும்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், கேஆர், முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்திற்குப் பின்னர் பாரதிராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் என்பது தேவை இல்லை. ஒற்றுமை இல்லாமல் அனைவரும் பல அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். தலைவர் பதவிக்கு வருபவர்களுக்கு சேவை மனப்பான்மை இருக்க வேண்டும்.
ஆனால் பலதரப்பட்ட போட்டி வரும்போது சேவை மனப்பான்மை இருக்காது. ஆகவே தான் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களில் முக்கியமான சிலர் கூடிப் பேசி ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்யலாம் என நினைக்கிறோம்.
பதவிக்கு வரும் நபர்கள் தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விட்டு செயலாற்ற வேண்டும். தேர்தல் இல்லாமல் வயதில் மூத்த தயாரிப்பாளர்கள் சொல்வதை கேட்டு ஒத்துப் போகும் ஒருவர் தலைமை இடத்திற்கு வர வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். விஷால் மீது பல்வேறு ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளன.
எனவே நாகரிகம் தெரிந்தவராக இருந்தால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று விஷால் வரமாட்டார். பொது வாழ்வில் குற்றம் இல்லாதவர் தான் தேர்தலில் நிற்க வேண்டும்.
இவ்வாறு பாரதிராஜா பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments