உங்களை திரை துறையில் தயாரிப்பாளராக உருவாக்கியதே அமீர் தான்: பாரதிராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடிப்பில், அமீர் இயக்கத்தில் உருவான ’பருத்திவீரன்’ படத்தின் பிரச்சனை பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இது குறித்து திரை உலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
திரு ஞானவேல் அவர்களே உங்களுடைய காணொளியை பார்க்க நேரிட்டது. ’பருத்திவீரன்’ திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதாரப் பிரச்சனையை சார்ந்தது மட்டுமே. ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும் பெயருக்கும் படைப்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
உங்களை திரை துறையில் அடையாளப்படுத்தி மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் திரு அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்து விட வேண்டாம். ’பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு முன்பு அமீர் இரண்டு படம் இயக்கி அதில் ஒன்றை தயாரித்து உள்ளார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என் போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்.
ஏனெனில் உண்மையான படைப்பாளிகள் சாகும் வரை கற்றுக் கொண்டுதான் இருப்பார்கள். நான் இப்போதும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். மிகச்சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும் அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்சனையை சமூகமாக பேசி தீர்ப்பது சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்’ என இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
— Bharathiraja (@offBharathiraja) November 28, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com