தமிழகத்தை ரஜினி ஆள அனுமதிக்க முடியாது: இயக்குநர் பாரதிராஜா

  • IndiaGlitz, [Monday,February 03 2020]

தமிழகத்தை ஒரு தமிழர் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் தமிழகத்தை அல்லாதோர் ஆட்சிச் எய்ய அனுமதிக்க முடியாது என்றும், சீமான் உள்ளிட்ட ஒருசிலர் அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர்களை சேர்ந்தவர்கள் கூறி வரும் நிலையில் தற்போது இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

உங்கள் பூமியை நீங்கள் ஆள்வதுபோல, எங்கள் பூமியை தமிழர் ஆள வேண்டும். மராட்டிய மாநிலத்தை மராட்டியர் ஆள்கிறார், கர்நாடாவில் கன்னடர்தான் முதல்வர். அசாமில், அசாம் மாநிலத்தவர்தான் முதல்வர். ஏன் எங்களுக்கு எங்கள் மண்ணின் மைந்தர் முதல்வராக கூடாது? ஒருசில தவறான உதாரணங்களை காட்டி இனியும் தமிழனை ஏமாற்ற முடியாது. ஏனெனில் தமிழன் விழித்து கொண்டான் என்று கூறினார்.

மேலும் ரஜினிகாந்த் நல்ல மனிதர். எளிமையின் உச்சம். ரொம்ப அற்புதமானவர். நண்பர். அந்த அடிப்படையில் அவருடைய விழாக்களில் பங்கேற்கிறேன். ஆனால் தான் ஒரு தமிழர் என்று ரஜினி கூறி வருவதை ஏற்க முடியாது. அவர் தமிழகத்தில் வாழ வந்தவர் தான் தமிழர் அல்ல என்று கூறினார்.

More News

7 வருடங்களுக்கு பின் சுந்தர் சியுடன் இணையும் இசையமைப்பாளர்

சுந்தர் சி இயக்கிய வெற்றிப் படங்களான அரண்மனை மற்றும் அரண்மனை 2' ஆகிய படங்களை அடுத்து 'அரண்மனை 3' திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்

நயன்தாரா பட நாயகனின் படத்தில் அறிமுகமாகும் பிக்பாஸ் லாஸ்லியா!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இடம்பெற்ற போட்டியாளர்களில் ஒரு சிலர் திரையுலக வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே.

வெளிநாடுகளில் வரி செலுத்தாமல் அங்கு வாழும் இந்தியர்களுக்கு இனி இந்தியாவில் வரி..! மத்திய பட்ஜெட் 2020.

வெளிநாடுகளில் வரி செலுத்தாத வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ.களுக்கு) இனி இந்தியாவில் வரி விதிக்கப்படும்.

'தர்பார்' பட நஷ்டம் குறித்து தமிழக அமைச்சர் அதிரடி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த 'தர்பார்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில்

பாபநாசம் திரைப்பட பாணியில் நடந்த கொலை.. ஆதாரங்களுடன் கைது செய்த போலீஸ்..!

மகாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியில் இளைஞர் ஒருவரை கொன்று அவரது சடலத்தை பாபநாசம் திரைப்பட பாணியில் உணவகம் ஒன்றில் மறைத்து வைத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.