தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்த மடாதிபதியை மன்னிக்கலாமா? பாரதிராஜா

  • IndiaGlitz, [Thursday,January 25 2018]

காஞ்சி மடத்தை சேர்ந்த விஜயேந்திரர் சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்ததாக கூறப்படும் சர்ச்சை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெரும்பாலான தமிழ் ஆர்வலர்கள் விஜயேந்திரர் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் சமீபத்தில் வைரமுத்து-ஆண்டாள் விவகாரத்தில் உணர்ச்சி மிகுந்த கருத்துக்களை தெரிவித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, இந்த பிரச்சனை குறித்து ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

'தமிழ் மொழியும், தமிழ் இனமும் எங்கே நிற்கிறது? எங்கே போய்க்கொண்டிருக்கிறது? சிந்திக்க வேண்டிய சூழலில் ஒவ்வோரு தமிழனும் இருக்கிறான். கேரளம் கேரளாவாக இருக்கிறது. கர்நாடகம் கர்நாடகாவாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் தான் இந்தியாவாக இருக்கிறது. தமிழகம் தற்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. சொல்லும் கருத்துக்குத் தடை, எழுதும் எழுத்துக்குத் தடை, பேசும் பேச்சுக்கு தடை, வாழுகின்ற வாழ்க்கைக்கே தடை! என்று தமிழன் தன் தாய் மண்ணிலே அகதிகளாக வாழும் ஒரு அவலம் இங்கு அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆண்டாளைப்பற்றி பேசிய கவிஞன் வைரமுத்துவை அநாகரீகமாக பேசிய மதவாதிகளே! கொஞ்சம் யோசியுங்கள். இன்று தமிழுக்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. குரல் கொடுப்பீர்களா?

செம்மொழியான தமிழ் மொழியை ஒரு மூத்த மடாதிபதி அவமானப்படுத்தியிருக்கிறார். தமிழர்களே உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா? வாழ்வது தமிழ் மண். சுவாமிப்பது தமிழ்க் காற்று. சாப்பிடுவது தமிழ்ச்சோறு. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்ய மாட்டேனென்று, தேசிய கீதத்திற்கு மட்டும் தான் மரியாதை செய்வேனென்று எழுந்து நின்ற மடாதிபதியை நாம் மன்னிக்கலமா? அறிவார்ந்த தமிழ்க்கூட்டமே! நம் முதுகின் மீது ஏறி சாவாரி செய்கிறது ஒரு கூட்டம். நீ விழிக்கவில்லை என்றால்! உன் உயிரையும், உன் மொழியையும் அழித்து, இனத்தையும் அழித்து வாழும் இந்த ஒரு கூட்டம். இந்த இழி நிலை ஆந்திரா, கர்நாடகத்தில் நடந்தால் நிலைமையே வேறு. எந்தத் தமிழனாவது சமஸ்கிருத மொழியை அவமானப்படுத்தியிருக்கிறானா? இல்லை

இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

More News

லட்சுமி ராமகிருஷ்ணனுக்குத்தான் நன்றி சொல்லணும்: அருவி நடிகை

சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் 'அருவி. 100 வருட சினிமாவுலகில் மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்று இந்த படத்தை கூறலாம்.

ஜெய் படத்தில் இணையும் ஜிமிக்கி கம்மல்

ஜெய் நடிப்பில் சமீபத்தில் 'பலூன்' திரைப்படம் வெளியான நிலையில் தற்போது அவர் வெங்கட்பிரபு இயக்கி வரும் 'பார்ட்டி' படத்தில் நடித்து வருகிறார்.

பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி காலமானார்.

பழம்பெரும் தென்னிந்திய நடிகையும், நடிகை செளகார் ஜானகியின் சகோதரியுமான கிருஷ்ணகுமாரி இன்று பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 85

இது வைரமுத்து திருப்பி அடிக்கும் நேரமா?

கவிஞர் வைரமுத்துவுக்கு சோதனையான நாட்கள் என்றே சொல்லலாம். இராஜபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக அவர் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது

கமல் கட்சிக்கு ஆதரவு கொடுத்த பிரபல தயாரிப்பாளர்-நடிகர்

கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நிலையில் அவருடைய கட்சியில் சேரவும், இராமநாதபுரத்தில் நடைபெறும் முதல் மாநாட்டில் பங்குபெறவும் பல கோலிவுட் திரையுலகினர் முன்வந்துள்ளனர்