ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்? ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து பாரதிராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டி மீது விபச்சார வழக்கு பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு அமைப்பு காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
இந்த நிலையில் பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் ஸ்ரீரெட்டி விளம்பரத்திற்காகவும், பணம் பறிக்கவும் பிரபலங்களை பயமுறுத்தி வருவதாகவும், அவரிடம் ஆதாரங்கள் இருந்தால் வெளியிடட்டும் என்று கூறி வருகின்றனர். மேலும் ஒருசிலர் ஸ்ரீரெட்டியின் மனநிலை குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், 'ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடன் தான் எல்லாம் நடந்திருக்கிறது என்றும், அதனை வைத்து ஸ்ரீரெட்டி விளம்பரம் தேடிக்கொள்ளக்கூடாது என்றும், ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com