கமல்-ரஜினி யாருக்கு ஆதரவு: பாரதிராஜா பேட்டி

  • IndiaGlitz, [Tuesday,January 30 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அதிகாரபூர்வமாக கட்சியின் பெயரை அறிவித்து, 'நாளை நமதே' என்ற அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இன்னும் ஒருசில நாட்களில் தனது கட்சி பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அரசியலுக்கு வரவுள்ள கமல், ரஜினி ஆகிய இருவருக்கும், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி ஒருசில திரையுலகினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் இயக்குனர் பாரதிராஜா.

இந்த நிலையில் இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா பின்னர் செய்தியாளர்களிடம் கமல், ரஜினி அரசியல் குறித்து கூறியபோது, 'கடைசி காலத்தில் நாட்டிற்கு ஏதாவது செய்யலாம் என்ற நம்பிக்கை ரஜினி, கமலுக்கு வந்திருக்கலாம் என்றும், ரஜினி, கமல் இருவரும் தங்களது கட்சியின் கொள்கையை தெரிவித்த பிறகு தனது ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிக்கவுள்ளதாகவும் கூறினார்.