ஹெச்.ராஜாவே, எங்கள் மண்ணை விட்டு கிளம்பு: பாரதிராஜா

  • IndiaGlitz, [Friday,March 09 2018]

சமீபத்தில் எச்.ராஜா, பெரியார் சிலை குறித்து கூறிய சர்ச்சைக்குரிய பதிவிற்கு கிட்டத்தட்ட கண்டனம் தெரிவிக்காத பிரபலங்களே இல்லை என்று கூறலாம். குறிப்பாக அரசியல் தலைவர்களும், திரையுலகினர்களும் கடந்த நான்கு நாட்களாக எச்.ராஜாவிற்கு தங்களுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

''பெரியார் என்பவர் தனி மனிதன் அல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் அடையாளம். இந்த அடையாளத்தை அவமானப்படுத்தும் எதையும் எங்களால் தாங்க முடியாது. மூடநம்பிக்கையை உடைத்து, பெண்ணடிமையை எதிர்த்து போராடிய பெரியாரை வாய் கூசாமல் தேசத் துரோகி எனக் கூறும் ஹெச்.ராஜாவே, நீங்கள் பேசியது பெரியாருக்கு எதிரான பேச்சு அல்ல; ஒட்டுமொத்த தமிழனத்திற்கு எதிரானது.

பெரியாரின் சிலை, சாதி வெறியர்களின் சிலை இல்லை. ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளம். ஹெச்.ராஜாவுக்கு ஒரு முடிவில்லை என்றால், அவர் தமிழகத்தை கலவர பூமியாக்கிவிடுவார். ராஜா கேட்ட மன்னிப்பை உற்று கவனித்தால் தெரியும், அதில் உண்மை இல்லை என்பது. எனவே ஹெச்.ராஜாவே, எங்கள் மண்ணை விட்டு, நீங்கள் உங்கள் பெட்டி, படுக்கையுடன் உங்கள் மண்ணுக்குப் போய்ச் சேருங்கள். அப்படியென்றால்தான் நாங்கள் எங்கள் மண்ணையும் மொழியையும் தன்மானத்தையும் காப்பாற்ற முடியும். இதுவே உங்களுக்கு அளிக்கப்படும் சிறப்பான தண்டனை’
 

More News

மகளிர் தின கூட்டத்தில் கமல் செய்த சத்தியம்

இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் மகளிர் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

அர்ஜூன் ரெட்டி நாயகனின் தமிழ்ப்பட தலைப்பு அறிவிப்பு

தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவின் முதல் தமிழ்ப்படத்தை 'இருமுகன்' இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

தமிழக அரசை விட 3 லட்சம் அதிகம்: கமல் அதிரடி அறிவிப்பு

திருச்சி அருகேயுள்ள திருவெறும்பூரில் நேற்று இரவு போக்குவரத்து காவல்துறை அதிகாரி காமராஜ் என்பவரால் எட்டி உதைக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த உஷா

ஆணும் பெண்ணும் சமமல்ல: விராத் கோஹ்லியின் மகளிர் தின வீடியோ

இன்று உலகம் முழுவதும் மகளிர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம்: தியேட்டர் அதிபர்கள் எடுத்த அதிரடி முடிவு

திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் புதிய படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு, க்யூப் மற்றும் யுஎஃப்ஓ உள்ளிட்ட டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் திரைத்துறையினரிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த