மத்திய அரசிடம் பாரதிராஜா விடுத்த வேண்டுகோள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் மணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதுகுறித்து திரையுலகினர், அரசியல்வாதிகள் என பலரும் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒரு கோரிக்கையை மத்திய அரசுக்கு அறிக்கை மூலம் முன்வைத்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என் இனிய தமிழ் மக்களே...
இயக்குனர்கள் திரு.மணிரத்னம், திரு.அடூர் கோபாலகிருஷ்ணன், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது “தேசவிரோத குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். “மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலே ஒருவரை “தேசவிரோதி”, “நகர்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்கமுடியாது என்று தங்களுடைய கவலையை தானே குறிப்பிட்டுருந்தார்கள். இதற்காக தேசவிரோத வழக்குப்பதிவு செய்வதை ஏற்கமுடியாது. அரசு சார்பில் பேசியவர்கள், மத்திய அரசுக்கு இதில் தொடர்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
கலைஞர்கள் தங்கள் கருத்துக்களை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்யவேண்டும், பொது வெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவதும், பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்துடையவர்களை மவுனமாக்க முயல்வதும் ஏற்கதக்கதல்ல. ஆகவே மத்திய அரசு உடனடியாக 49 பேருக்கு எதிரான தேசதுரோக வழக்கினை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com