மத்திய அரசிடம் பாரதிராஜா விடுத்த வேண்டுகோள்!

  • IndiaGlitz, [Tuesday,October 08 2019]

சமீபத்தில் மணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதுகுறித்து திரையுலகினர், அரசியல்வாதிகள் என பலரும் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒரு கோரிக்கையை மத்திய அரசுக்கு அறிக்கை மூலம் முன்வைத்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என்‌ இனிய தமிழ்‌ மக்களே...

இயக்குனர்கள்‌ திரு.மணிரத்னம்‌, திரு.அடூர்‌ கோபாலகிருஷ்ணன்‌, ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள்‌ மீது “தேசவிரோத குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. “மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலே ஒருவரை “தேசவிரோதி”, “நகர்புற நக்சல்‌ என முத்திரை குத்துவதை ஏற்கமுடியாது என்று தங்களுடைய கவலையை தானே குறிப்பிட்டுருந்தார்கள்‌. இதற்காக தேசவிரோத வழக்குப்பதிவு செய்வதை ஏற்கமுடியாது. அரசு சார்பில்‌ பேசியவர்கள்‌, மத்திய அரசுக்கு இதில்‌ தொடர்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்‌.

கலைஞர்கள்‌ தங்கள்‌ கருத்துக்களை திரைப்படங்கள்‌ மூலமாகவே பதிவு செய்யவேண்டும்‌, பொது வெளியில்‌ பேசக்கூடாது என்று அச்சுறுத்துவதும்‌, பொய்‌ வழக்குகளின்‌ பேரில்‌ மாற்றுக்‌ கருத்துடையவர்களை மவுனமாக்க முயல்வதும்‌ ஏற்கதக்கதல்ல. ஆகவே மத்திய அரசு உடனடியாக 49 பேருக்கு எதிரான தேசதுரோக வழக்கினை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாழ்மையுடன்‌ கேட்டுக்‌கொள்கிறேன்‌.

More News

'ஓ பேபி' இயக்குனரின் அடுத்த படத்தில் அமலாபால்!

சமீபத்தில் வெளிவந்த சமந்தாவின் 'ஓபேபி' திரைப்படம் தமிழ், மற்றும் தெலுங்கு மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது. 70 வயது கிழவியான லட்சுமி, 20 வயது சமந்தாவாக

கருணாஸ் வேண்டுகோள்: சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கிய வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. நீண்ட ஆயுதபூஜை விடுமுறை நாட்களில் இந்த படம் வெளிவந்து வசூல் மழையை

ரஜினிகாந்த் மாறவே இல்லை: கலைஞானம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னை முதன் முதலாக ஹீரோவாக்கி அழகு பார்த்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கலைஞானம் அவர்களுக்கு சொந்த வீடு வாங்கி கொடுத்து

அஜித்தின் முறுக்குமீசை கெட்டப்: இணையத்தில் வைரல்

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதே படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தல 60' திரைப்படத்தின்

சாகிறதா இருந்தாலும் சண்டபோட்டுட்டு சாகணும்: கார்த்தியின் 'கைதி' டிரைலர்

ஒருபக்கம் ரூ.800 கோடி சரக்கை போலீஸிடம் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் கும்பல், இன்னொரு பக்கம் அந்த சரக்கை கடத்தும் கைதி கார்த்தி, இவர்களுக்கு நடுவே போலீஸ் என மும்முனை போராட்டத்தின் கதை