தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களுக்கு பாரதிராஜா வைத்த செக்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பெரும் சிக்கலில் உள்ள காரணத்தினால் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து அவ்வப்போது கோரிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனை அடுத்து ஒரு சில நடிகர்கள், நடிகைகள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்தாலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் யாரும் சம்பளத்தை குறைக்க இதுவரை முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய சங்கம் உருவாகி ஆக்கபூர்வமான சில செயல்களை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இயக்குனர் பாரதிராஜா அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ரூபாய் 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30 சதவீதம் குறைத்து கொண்டு, முடியும் தருவாயில் உள்ள திரைப்படங்களை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது வேண்டுகோளாக இருந்தாலும் மாஸ் நடிகர்களுக்கு வைத்த செக் என கருதப்படுகிறது. இந்த வேண்டுகோளை தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஏற்றுக்கொண்டு கொரோனா பாதிப்பினால் சிக்கலில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

தமிழக முதல்வருடன் முக ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்தார்.

நாட்டை விட்டே வெளியேறி விடுவேன்… எதிர்க்கட்சியினரை நோக்கி சாவல் விடும் அதிபர் ட்ரம்ப்!!!

வருகிற நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது,

ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை – ராஜஸ்தான்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37 ஆவது லீக் போட்டியில் மிகவும் இக்கட்டான நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

'நம்ம வீட்டு பிள்ளை' நாயகிக்கு கிடைத்த மெகா பட்ஜெட் பட வாய்ப்பு!

நடிகர்கள் சித்தார்த் மற்றும் சர்வானந்த் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் தகவலை சமீபத்தில் பார்த்தோம். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ஒரு நாயகியாக அதிதி ராவ் ஹைத்ரி நடிக்க ஒப்பந்தம் ஆனார்

நீட் தேர்வில் சாதனை: சத்தியத்தை நிறைவேற்றிய சபரிமாலா 

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற மன உளைச்சலில் அரியலூர் அனிதா கடந்த 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.