உயிருக்குப் போராடும் இயக்குநர் பாரதிராஜா ஹீரோ? மனதை உலுக்கும் வைரல் வீடியோ!!!
- IndiaGlitz, [Monday,January 11 2021]
சினிமா ஒரு மாயக்கண்ணாடி என்பது பெரும்பாலான நேரங்களில் உண்மையாகத்தான் இருக்கிறது. கேமரா வெளிச்சம் இருக்கும் வரைக்கும் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் மவுசு போனவுடன் காணாமல் போய்விடுவதும் இங்கு இயல்பாக நடக்கிறது. இயக்குநர் பாரதிராஜா இயக்கிய “என் உயிர் தோழன்” திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அதற்குப்பின் 4-5 படங்களிலும் ஹீரோவாக நடித்த நடிகர் பாபு கடந்த 20 வருடமாக படுத்த படுக்கையிலே கிடக்கிறார்.
தான் நடித்த முதல் படத்திலேயே முத்திரை பதித்த நடிகர் பாபு அதற்கு பின் கிட்டத்தட்ட 14 படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆனால் “மனசார வாழ்த்துங்களேன்” என்ற படத்தின் ஒரு காட்சிக்காக மாடியில் இருந்து குதித்த இவருக்கு படுகாயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்த பின்பு இவர் உயிர் பிழைத்த போதிலும் பாபுவால் அதன்பிறகு நடமாட முடியவில்லை. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இயக்குநர் பாரதிராஜா அவரை நேரில் சந்தித்து இருக்கிறார்.
அவரைப் பார்த்தவுடன் படுக்கையில் இருந்த நடிகர் பாபு கையைத் தூக்குவது போன்ற வீடியோ காட்சி தற்போது இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது. ஒரு சண்டைக் காட்சிக்காக நடிக்கப் போய் கிட்டத்தட்ட 20 வருடமாக படுக்கையிலேயே கிடக்கும் தனது ஹீரோவை பாரதிராஜாவும் பார்த்து கண்கலங்கிய காட்சி பார்ப்போரை மேலும் பதைக்க வைத்திருக்கிறது.
கடந்த 1990 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட என்னுயிர் தோழன் படத்தில் நடிகர் பாபு ஹீரோவாக நடித்தார். அதில் அரசியல் கட்சி தொண்டனாக வந்து சிறந்த நடிப்புக்காக பாராட்டப்பெற்றார். இந்த வெளிச்சத்தில் அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் குவிந்தன. “பொண்ணுக்கு சேதி வந்தாச்சு“, “தாயம்மா“ உள்ளிட்ட 4-5 படங்களில் ஹீரோவாக நடித்த பாபுவிற்கு “மனசார வாழ்த்துங்களேன்” படக் காட்சியில்தான் காயம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிட்டத்தக்கது. அதற்குப்பின் கடந்த 20 வருடங்களாக இவர் படுத்த படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகவலை அடுத்து நடிகர் பாபுவிற்காகப் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
உதவி கேட்கும் 'என் உயிர்த் தோழன்' படத்தின் ஹீரோ பாபு
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) January 9, 2021
கண் கலங்கிய இயக்குனர் பாரதிராஜா pic.twitter.com/ifu2FeRi8Z