'லியோ'வுடன் ரிலீசாக இருந்த திரைப்படம்.. திடீரென ரிலீஸ் தேதி மாற்றம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் 20ஆம் தேதி பாரதிராஜா நடிப்பில், மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’மார்கழி திங்கள்’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
’மார்கழி திங்கள்’ என்ற திரைப்படம் ஏற்கனவே அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின் அக்டோபர் 20ஆம் தேதி ரிலீஸ் தேதி என மாற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி அக்டோபர் 27ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 'லியோ’ திரைப்படம் போட்டியின்றி சோலோவாக ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாரதிராஜா முக்கிய வேடத்தில் கிடைக்கும் இந்த படத்தில் ஷியாம் மற்றும் ரக்ஷனா நாயகன் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் சுசீந்திரனின் பல படங்களில் நடித்த அப்புகுட்டி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுசீந்திரன் இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளதோடு இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
✨New date, new excitement! Save the date: October 27th!
— Diamond Babu (@idiamondbabu) October 16, 2023
Isaignani @ilaiyaraaja Musical 🎶
Prod by @Dir_Susi 's #VennilaProductions
Dir by @manojkumarb_76 @offBharathiraja @shyamshelvan @maalu1815 @naksha_saran @shobimaster @vasukibhaskar @saregamasouth @onlynikil @decoffl pic.twitter.com/5ygWl9zYAn
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments