41 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் பாரதிராஜா பட நடிகர்.. ஒரே படத்தில் சினிமாவில் இருந்து விலகியவர்..!

  • IndiaGlitz, [Monday,September 04 2023]

பாரதிராஜாவின் படத்தில் நடித்து அந்த படத்தோடு சினிமாவில் இருந்து விலகியவர் தற்போது 40 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரீஎண்ட்ரியாக காத்திருப்பதாக சமீபத்தில் அளித்து பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’காதல் ஓவியம்’ திரைப்படம் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியானது. கண்ணன் மற்றும் ராதா முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

குறிப்பாக கண்ணன் இந்த படத்தில் பார்வை தெரியாத மாற்றுத்திறனாளியாக மிகவும் சிறப்பாக நடித்திருந்தாலும் அவருக்கு அந்த படத்தை அடுத்து வேறு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அவர் சினிமாவில் இருந்து விலகி அமெரிக்கா சென்ற நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சென்னை வந்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் ’காதல் ஓவியம்’ படத்தில் கண் தெரியாத கேரக்டரில் நான் கஷ்டப்பட்டு நடித்தேன். கண்விழி பிதுங்கியபடி நான் நடித்தது பார்வையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதால் தான் அந்த படம் தோல்வி அடைந்தது என்று கூறினார்.

தற்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நடிக்க தயார் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். 60 வயதான கண்ணனுக்கு தற்போது உள்ள இயக்குனர்கள் வாய்ப்பு கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அப்பாஸ், கிரண் ரத்தோட், ஷகிலா. பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் முழு பட்டியல் இதோ..!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் நேற்று தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.

பிரபல இசையமைப்பாளர் கார் விபத்தில் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

கேரளாவிலிருந்து பிரபல இசையமைப்பாளர் தனது காரில் நண்பர்களுடன் சென்னை திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அந்த கார் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே இசையமைப்பாளர் மறைந்த துயர சம்பவம் பெரும்

5 வருடங்களுக்கு பின் தனுஷ் உடன் மீண்டும் இணைந்த பிரபல நடிகை.. இரவு பகலாக படப்பிடிப்பு..!

கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷின் படத்தில் நடித்த பிரபல நடிகை 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கோவா பீச்சில் அமலாபால்.. செம்ம கிளாமர் புகைப்படங்கள்..!

நடிகை அமலா பால் கடந்த சில வாரங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் என்பதும் இது அவரது ஃபாலோயர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது

நல்லதுல்ல என்னடா கெட்டது.. கெட்டதுல்ல என்னடா நல்லது.. 'மார்க் ஆண்டனி' டிரைலர்..!

 விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில்