'மீ டூ' கேள்வியால் ஆத்திரமான பாரதிராஜா

  • IndiaGlitz, [Tuesday,October 16 2018]

உலகம் முழுவதும் கடந்த ஆண்டே 'மீ டூ' ஹேஷ்டேக் பரபரப்பை ஏற்படுத்தினாலும் தமிழகத்திற்கு 'மீ டூ'வை அறிமுகம் செய்த பெருமை பாடகி சின்மயியை சாரும். வைரமுத்து மீது அவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தை மட்டுமின்றி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் வைரமுத்துவுக்கு நெருங்கிய நண்பர்களும் ஒருசில அரசியல்வாதிகளும் அவருக்கு சாதகமான கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வைரமுத்து மீதான 'மீ டூ' குற்றச்சாட்டு குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது ஆத்திரம் அடைந்ததுடன் அந்த செய்தியாளரை ஒருமையிலும் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் 'ஆதாரமில்லாத 'மீ டூ' குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாது என்றும், 'மீ டூ' குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை கூறுங்கள் என்றும் பாரதிராஜா கூறினார். இதுவரை எந்த பிரபலமாவது அல்லது அரசியல்வாதியாவது ஆதாரத்தை கையில் வைத்து கொண்டு குற்றஞ்சாட்டிய வரலாறு உண்டா? என்பதை பாரதிராஜாவே விளக்கினால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

More News

சென்னையில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: 17 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த ஆண்டும் தமிழகத்தின் ஒருசில இடங்களில் குறிப்பாக சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக

நடிகர் மீதான 'மீ டூ' குற்றச்சாட்டால் பதவி இழந்தாரா டி.கே.எஸ் இளங்கோவன்?

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் திமுக அமைப்பு செயலாளராக இருந்த டி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறாரா சத்யராஜ் மகள்?

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பது தெரிந்ததே. நியூட்ரிஷன் படிப்பில் பி.எச்.டி படித்து வரும் திவ்யா, கடந்த சில ஆண்டுகளாக 'அக்சய பாத்திரம்'

10 திரையரங்குகளுக்கு இனி படமே கிடையாது: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு

தமிழகத்தில் உள்ள ஒன்பது திரையரங்குகள் மற்றும் பெங்களூரில் உள்ள ஒரு திரையரங்கம் ஆகிய பத்து திரையரங்குகளுக்கு இனி எந்த படமும் ரிலீஸ் செய்ய ஒத்துழைப்பு கொடுப்பதில்லை

வரலட்சுமியைப் பற்றி பேசுவதற்கே பயமாக இருக்கிறது: கீர்த்திசுரேஷ்

வரலட்சுமியைப் பற்றி பேசுவதற்கே பயமாக இருக்கிறது. அந்தளவு நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.