உண்மையில் என்ன நடந்தது? 'தனிமைப்படுத்துதல்' குறித்து பாரதிராஜா விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் பாரதிராஜா சென்னையில் இருந்து தேனி சென்ற நிலையில் அவர் தேனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் என்ற செய்தி பரபரப்பாக வெளிவந்த நிலையில் இதுகுறித்து பாரதிராஜா தற்போது வீடியோ ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
இன்றைய செய்தித்தாளிலும், தொலைக்காட்சியிலும், ஊடகங்களிலும் பாரதிராஜா தேனியில் தன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் என்ற செய்தி பரபரப்பாக வெளியாகியது. உண்மையில் நடந்தது என்ன என்பதை தற்போது சொல்கிறேன்
என்னுடைய சகோதரி தேனியில் உடல் நலமின்றி இருந்தால் அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக முறையாக அதற்கான அனுமதி சீட்டை சென்னையில் பெற்றேன். அதன் பின்னர் பல மாவட்டங்கள் கடந்து தேனி வந்து என் சகோதரியை பார்த்தேன். தற்போது அவர் அறுவை சிகிச்சை செய்து நலமாக உள்ளார்.
நான் பல மாவட்டங்களை கடந்து வந்ததால் தேனி நகராட்சி சுகாதார அதிகாரியிடம் தொடர்புகொண்டு தயவு செய்து என்னை சோதனை செய்யுங்கள். நான் பல மாவட்டங்களை கடந்து வந்திருக்கிறேன். எனவே தற்காப்புக்காக சோதனை செய்து கொள்ளுங்கள் என்று முறையாக நேர்மையாக தெரிவித்தேன். இதனை அடுத்து எனக்கு மூன்று முறை சோதனைகள் செய்யப்பட்டது.
ஒன்று சென்னையில், இரண்டாவதாக ஆண்டிபட்டியில், மூன்றாவதாக தேனியில், மூன்றிலும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததையடுத்து எனக்கும் என்னுடைய உதவியாளர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். எனவே எனக்கும் என்னுடைய உதவியாளர்கள் இருவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்து கொள்கிறேன். மேலும் எங்களை யாரும் தனிமைபடுத்தவில்லை. நாங்களே மக்கள் நலன் கருதி எங்களை நாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளோம். இதுதான் உண்மையில் நடந்தது. எனவே இதை பெரிதுபடுத்தி பெரிய செய்தியாக்கி மக்களை குழப்ப வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் என்னுடைய உதவியாளர்களுடன் சேர்ந்து அடுத்த படத்திற்கான பணியில் இருக்கிறேன் என்பதையும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
Official Statement from @offBharathiraja from His “Theni” Residence #COVID19India #TamilNadu #News23 #NM #Media pic.twitter.com/SBolTdTFWg
— Nikil Murukan (@onlynikil) May 6, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com