பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை: பாரதிராஜா பெருமிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ராதிகா திரையுலகில் அறிமுகமாகி 42 வருடங்கள் ஆனதை அடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே
கடந்த 1978ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய ’கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தில் பாஞ்சாலி என்ற கேரக்டரில் ராதிகா அறிமுகமானார். அதன் பின்னர் ரஜினி, கமல் உள்பட பல பிரபலங்களுடன் ஜோடியாக நடித்து கடந்த 42 ஆண்டுகளாக ஹீரோயின் மற்றும் குணசித்திர வேடங்களில் கலக்கி வருகிறார். மேலும் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ராதிகாவின் 42 வருட திரையுலக பயணத்தை பாராட்டி அவரை அறிமுகம் செய்த இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
என் இனிய தமிழ் மகளே,
கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலி என்கின்ற 16 வயது ஒரு மழலையை ஏற்றி
கொடி அசைத்து பயணிக்க வைத்தேன்..
42 வருடமாகிறது
என் பாஞ்சாலியின்
பயணம் இன்னும்
நிற்கவில்லை..
பால்வெளித் திரளுக்கு எல்லை இல்லை..
பாரதிராஜாவின் இந்த பாராட்டு குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகை ராதிகா ’இதைவிட ஒரு சிறப்பான நாள் இருக்க முடியுமா? என்று தெரியவில்லை. நான் உங்களால் மட்டுமே நான் இருக்கிறேன்.உங்கள் ஆசீர்வாதங்கள் என்னை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆணாதிக்கம் நிறைந்த இந்த திரையுலக கோட்டையில் ஒரு பெண்ணின் சாதனைகளை கொண்டாடாத சமகாலத்தவர் மத்தியில் உங்களுடைய வார்த்தைகள் எனக்கு மிகப்பெரியதாக உள்ளது, எப்போதும் போல’ என்று ராதிகா தெரிவித்துள்ளார்
Can it get better than this,I am who I am , who I am only because of you. Your blessings is what keeps me going. In this male dominated bastion and contemporaries who don’t celebrate a woman’s achievements your words rises above the ordinary ... as always???? https://t.co/6frEmtG7no
— Radikaa Sarathkumar (@realradikaa) August 13, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments