கேவலமான படம்: 'இரண்டாம் குத்து' குறித்து பாரதிராஜா
- IndiaGlitz, [Thursday,October 08 2020]
சந்தோஷ் ஜெயகுமார் இயக்கி நடித்த ‘இரண்டாம் குத்து’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை திரையுலகினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் தற்போது பாரதிராஜா இந்த படத்தை மிகவும் கேவலமான படம் என்று குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனமாக இருந்தாலும் அதில் மக்களுக்கு தேவையான சமூக கருத்தை ஜனரஞ்சகத்தோடு எம்ஜிஆர் சிவாஜி படங்களில் இருந்தது. கமல் ரஜினி காலத்திலும் ஆபாசம் கலக்காமல் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் தான் படங்கள் வந்தன.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆபாசத்தின் உச்ச கட்ட காட்சிகள் கொண்ட ஒருசில திரைப்படஞ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படங்கள் வெற்றி பெறுவதும் ஒரு பெரும் வேதனையாக உள்ளன.
இந்த நிலையில் சந்தோஷ்குமார் இயக்கிய ’ஹரஹர மகாதேவகி’ மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய திரைப்படங்கள் காமெடி மற்றும் ஹாரர் என்ற பெயரில் ஆபாசத்தின் உச்சகட்டமாக பல காட்சிகள் இருந்தது. அந்த வகையில் தற்போது வெளிவர இருக்கும் ‘இரண்டாம் குத்து’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து பாரதிராஜா கூறியபோது ‘இரண்டாம் குத்து’ பட விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். சினிமா வியாபாரம் தான், ஆனால் கேவலமான நிலைக்கு வந்திருப்பது வேதனை அளிக்கிறது. கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தை போதிக்கவா முன்வந்தோம்? என்று குறிப்பிட்டுள்ளார். பாரதிராஜாவின் இந்த கண்டனம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— Bharathiraja (@offBharathiraja) October 8, 2020