பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதால் பரபரப்பு!
- IndiaGlitz, [Friday,August 26 2022]
உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
தமிழ் திரை உலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜா சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து அவரது மகன் மனோஜ் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘பாரதிராஜாவுக்கு நீர்ச்சத்து குறைவாக இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பாரதிராஜாவின் குடும்பத்தினர் ஆலோசனையின்படி இன்று அவர் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு டாக்டர் ராஜகோபால் என்பவரின் தலைமையில் தொடர்ந்து மேல் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான ஏசி சண்முகம் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பாரதிராஜா விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.