இது போதும்டா: தங்க மகன் தனுஷூக்கு பாரதிராஜா வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் கோலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு இன்று அதிகாலை முதலே வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனுசுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
திரையில் தோன்றும் ஒரு சில கதாபாத்திரங்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுருவி நம் உணர்வோடு உறவு கொண்டதாக அமைந்து விடும். ஆனால் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குணநலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்து விடுவது உண்டு
நிஜ வாழ்க்கையில் எப்படியோ, அதை திரையிலும் பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே. அதில் உன்னை நான் முதன்மையானவனாக பார்க்கிறேன். எளிமை, தன்னடக்கம், விருதுகள் வென்று குவித்தாலும் ‘நான்’ என்கின்ற அகந்தை அற்ற பணிவு, சிறந்த கலை தொழில்நுட்ப அறிவு. இது போதும்டா.. இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக்கதவைத் தட்டும்.
பேரன்புமிக்க தங்கமகன் தனுஷ் இன்றைய நன்நாளில் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு பாரதிராஜா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"தங்க மகன்" தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.@dhanushkraja#HappyBirthdayDhansuh
— Bharathiraja (@offBharathiraja) July 28, 2021
அன்புடன்
பாரதிராஜா pic.twitter.com/UGh6fhkEzl
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments