கமல்ஹாசனின் 61 வருட திரையுலக பயணம்: வாழ்த்து தெரிவித்த இமயமும், மகனும்!

கடந்த 1959 ஆம் ஆண்டு ’களத்தூர் கண்ணம்மா’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான உலகநாயகன் கமலஹாசன் தற்போது 61 ஆண்டு திரையுலக பயணத்தை முடித்துள்ளார். இதனை அடுத்து கோலிவுட் திரையுலகம் அவரை கொண்டாடி வருகின்றது. இளைய தலைமுறை நடிகர்கள் முதல் சீனியர் நடிகர்கள் வரை கமல்ஹாசனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் தமிழ்த் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்தவரும் கமலஹாசன் நடித்த ’16 வயதினிலே’ ’சிகப்பு ரோஜாக்கள்’ ’டிக் டிக் டிக்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவருமான இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் அவருடைய மகன் மனோஜ் பாரதியும் கமல்ஹாசனுக்கு தங்களுடைய சமூக வலை பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

பாரதிராஜா தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது: இந்திய திரை உலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து பல்வேறு தொழில் நுடபங்கள், பல நூறு காதாபாத்திரங்கள், உடலை வருத்தி
உச்சம் தொட்ட உலக நாயகன் என் கமலுக்கு வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் மனோஜ்பாரதி தனது சமூக வலைத்தளத்தில் ’61 ஆண்டுகால திரையுலக பயணத்தை முடித்த கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரே துறையில் இத்தனை ஆண்டுகாலம் பயணம் செய்த உங்களுக்கு எனது மிகபெரிய மரியாதை. தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு சென்ற நீங்கள் எங்களுக்கு ஒரு பொக்கிஷம்’ என்று கூறியுள்ளார்.