தற்கொலை செய்து கொண்ட தென்னை விவசாயி குடும்பத்திற்கு அமீர், பாரதிராஜா உதவி

  • IndiaGlitz, [Friday,November 23 2018]

சமீபத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலினால் டெல்டா மாவட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான தென்னை மரங்கள் விழுந்து பல விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. பிள்ளையை போல் வளர்த்த தென்னம்பிள்ளைகள் தரையில் வீழ்ந்து கிடந்ததை பார்த்து பல தென்னை விவசாயிகள் ரத்தக்கண்ணீர் வடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரத்தநாடு வட்டம் சோழகன் குடிக்காடு திருவோணம் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜன் என்பவர் தான் ஆசை ஆசையாய் வளர்த்த தென்னை மரங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டதை அறிந்து மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட சுந்தர்ராஜன் குடும்பத்தாரை இன்று இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறியதோடு ரூ. 50 ஆயிரம் ரூபாய் வழங்கினர். உதவி செய்த இயக்குனர்களுக்கு சுந்தர்ராஜன் குடும்பத்தினர் கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.

More News

ரசிகரின் கிண்டலுக்கு நடிகர் பிரசன்னாவின் மெச்சூரிட்டியான பதில்

கோலிவுட்டின் இளம் நடிகர்களில் ஒருவராகிய பிரசன்னா தற்போது திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

தமிழிசை ஒரு விஞ்ஞானி: கமல்ஹாசன் கிண்டல்

சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசனுக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது வாக்குவாதங்கள் நடந்து வருவது வழக்கமாக உள்ளது.

கிறிஸ்துமஸ் ரிலீஸ் பட்டியலில் இணைந்த இன்னொரு படம்

வரும் கிறிஸ்துமஸ் திருநாள் விடுமுறை தினத்தில் ஏற்கனவே 'மாரி 2', 'சீதக்காதி' உள்பட ஒருசில திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் இன்னொரு படமும் இணைந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களுக்கு இதெல்லாம் புரியாது: பிரபல நடிகருக்கு ரேவதி கண்டனம்

மீடூ ஒரு விளம்பர இயக்கம் என்று ஒருசிலரும், பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியே கூற கிடைத்திருக்கும் வாய்ப்பு என்று ஒருசிலரும் கூறி வருகின்றனர்.

எனக்கா ரெட் கார்டு, எடுத்து பாரு என் ரெக்கார்டு? சிம்பு

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.