ஜெயலலிதா படம் சாத்தியமா? கிளம்பும் போட்டிகளால் குழப்பம்

  • IndiaGlitz, [Sunday,August 19 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் விஜய் இயக்கவுள்ளதாகவும், அதற்கான திரைக்கதையை அவர் தயார் செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தது. 

இந்த நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தை ஆதித்யா பரத்வாஜ் என்பவர் தயாரிக்கவுள்ளதாகவும் இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே 'குற்றப்பரம்பரை' என்ற படத்தை பாரதிராஜாவும் பாலாவும் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துமோதலினால் அந்த படத்தை இருவருமே தற்போதைக்கு கைவிட்டதாக தெரிகிறது. அதேபோல் தற்போது ஜெயலலிதா படத்தையும் இரண்டு இயக்குனர்கள் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஜெயலலிதா என்பவர் அனைவருக்கும் பொதுவான ஒரு அரசியல் தலைவர், அவருடைய வாழ்க்கை வரலாறு படத்தை யார் வேண்டுமானாலும் இயக்கலாம், ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய இயக்குனர்கள் இயக்க முன்வந்துள்ளதால் இந்த படம் சாத்தியமா? என்ற குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.

More News

விஜய் நடிக்க யோசித்த கதை தான் 'ஜீனியஸ்' : சுசீந்திரன்

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜீனியஸ்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது

கேரள வெள்ளம்: நடிகை அனன்யாவுக்கு தஞ்சம் கொடுத்த பிரபல நடிகை

கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் பேய்மழையால் நூற்றுக்கணக்கானோர் பலியானது மட்டுமின்றி பலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது

பாபிசிம்ஹாவின் படத்தில் இணைந்த பிரபல நடிகை

தேசிய விருது பெற்ற நடிகர் பாபிசிம்ஹா தற்போது 'அக்னிதேவ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சென்னையில் ஒரு நாள் 2' பட இயக்குனர் ஜான்பால்ராஜ், ஷாம் சூர்யாவுடன் இணைந்து இயக்கி வருகிறார்.

கேரள வெள்ள நிவாரண நிதியாக ரஜினி கொடுத்த தொகை

கடவுளின் தேசம் என்று அழைக்கப்பட்ட கேரள மாநிலம் இன்று வெள்ளத்தின் பிடியில் தத்தளித்து வருகிறது.

திரு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்: படப்பிடிப்பு தொடங்கியது

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.