பிரபல ஒளிப்பதிவாளர் மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்!
- IndiaGlitz, [Monday,February 01 2021]
பாரதிராஜா இயக்கிய ’16 வயதினிலே’ படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி அதன் பின்னர் ’கிழக்கே போகும் ரயில்’ ’சிகப்பு ரோஜாக்கள்’ ’இளமை ஊஞ்சலாடுகிறது’ ’புதிய வார்ப்புகள்’ ’நிறம் மாறாத பூக்கள்’ உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஒளிப்பதிவாளர் நிவாஸ். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்
மேலும் ’கல்லுக்குள் ஈரம்’ ’எனக்காக காத்திரு’ ’நிழல் தேடும் நெஞ்சங்கள்’ ’செவ்வந்தி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ஒளிப்பதிவாளர் நிவாஸ் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் தனது ஐந்து படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நிவாஸ் மறைவு குறித்து பாரதிராஜா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
என் திரைப் பயணமான
16 வயதினிலே முதல்
தொடர்ந்து ஐந்து வெற்றிகளுக்கு துணை நின்ற பெரும் படைப்பாளி,
இந்திய திரை உலகின் மிகச்
சிறந்த ஒளிப்பதிவாளர்,
என் நண்பன் திரு. நிவாஸ்
மறைவு அதிர்ச்சியளிக்கிறது
ஆழ்ந்த இரங்கல்கள்
என் திரைப் பயணமான
— Bharathiraja (@offBharathiraja) February 1, 2021
16 வயதினிலே முதல்
தொடர்ந்து ஐந்து வெற்றிகளுக்கு துணை நின்ற பெரும் படைப்பாளி,
இந்திய திரை உலகின் மிகச்
சிறந்த ஒளிப்பதிவாளர்,
என் நண்பன் திரு. நிவாஸ்
மறைவு அதிர்ச்சியளிக்கிறது
ஆழ்ந்த இரங்கல்கள்.
பாராதிராஜா pic.twitter.com/0gVZNeGxI3