திரையுலக பின்னணி இல்லாத நாயகி வேண்டும்: பாரதிராஜா அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,May 12 2023]

தனது மகன் இயக்கும் முதல் படத்திற்கு திரையுலக பின்னணி இல்லாத நாயகி வேண்டும் என பாரதிராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

என் மகன் மனோஜ் ’மார்கழி திங்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறான். இந்த படத்தின் கதையின் நாயகியை சினிமா பின்னணி இல்லாத திறமையான ஒருவருக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாக என்னிடம் கூறினான். உண்மையிலேயே என் மகனின் இந்த எண்ணம் மகிழ்ச்சி அளிக்கிறது.

ராதிகா, ராதா, ரேவதி, ரேகா என பத்துக்கு மேற்பட்ட கதாநாயகிகளை நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். என் வழியில் என் மகனும் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழில் தமிழ் பேசக்கூடிய பல கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் வரவேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். மனோஜ் பாரதிராஜா இயக்கும் ’மார்கழி திங்கள்’ திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் தனது வெண்ணிலா ப்ரொடக்ஷன் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சுசீந்திரன் கூறிய போது ’இந்த படத்தில் நடிக்க விரும்பும் பெண்கள் வீடியோவை பதிவு செய்து அனுப்பலாம் என்றும் அந்த வீடியோ பிரபலங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்படும் என்றும் அதிலிருந்து மக்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவர் தான் இந்த படத்தின் நாயகி என்றும் தெரிவித்துள்ளார்.

More News

இயக்குனர் நந்தா பெரியசாமி அடுத்த படத்தில் ஹீரோ இவரா? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. 

2023ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் இதுதான் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

சீரியல் நடிகையை சரக்கடிக்க கூப்பிட்ட தயாரிப்பாளர்.. எல்லை மீறியதாக புகார்..!

 'ரூமுக்கு வா சரக்கு அடிக்கலாம்' என தயாரிப்பாளர் அழைத்து தன்னிடம் எல்லை மீறியதாக சீரியல் நடிகை ஒருவர் தயாரிப்பாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொந்த கிராமத்திற்கு விசிட் அடித்த நடிகை சீதா.. க்யூட் வீடியோ வைரல்..!

நடிகை சீதா தனது சொந்த கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

இது முழுக்க முழுக்க வதந்தி, யாரும் நம்ப வேண்டாம்: 'இராவண கோட்டம்' படக்குழு அறிக்கை..!

சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான 'இராவண கோட்டம்' என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது,.