'பாரதி கண்ணம்மா' நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை சன் டிவி பிரபலமா?

  • IndiaGlitz, [Thursday,July 04 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்த நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும் அவரை திருமணம் செய்ய போவார் விஜய் சன் டிவி பிரபலம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாரதி கண்ணம்மா’ என்ற சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது. இந்த சீரியலில் பாரதியாக அருண்பிரசாத், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்பிரியா நடித்திருந்த நிலையில் இந்த சீரியலில் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி கேரக்டரில் கண்மணி மனோகரன் என்பவர் நடித்திருந்தார்.

இவர் இந்த சீரியலின் ஆரம்பத்தில் வில்லத்தனம் செய்தாலும் அதன் பிறகு அவரது கேரக்டர் பாசிட்டிவாக மாறியது என்பதும் இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் தெரிந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் ரோஷினியை போலவே இவரும் இந்த சீரியலில் இருந்து பாதியிலே விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ’அமுதாவும் அன்னலட்சுமி’ என்ற சீரியலில் நாயகி ஆக கண்மணி மனோகரன் நடித்திருந்தார்.



இந்த நிலையில் கண்மணி மனோகரன் மற்றும் சன் டிவி தொகுப்பாளர் அஷ்வத் ஆகிய இருவருக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்த புகைப்படத்தை கண்மணி தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சுசித்ரா சர்ச்சை கருத்துக்கு பதிலடி கொடுத்தாரா த்ரிஷா.. வைரல் பதிவு..!

பாடகி சுசித்ரா சமீபத்தில் விஜய் மற்றும்  த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்த நிலையில் அந்த கருத்துக்கு  மறைமுகமாக பதிலடி கொடுக்கும் வகையில் த்ரிஷா தனது

தனுஷின் 'ராயன்' இசை வெளியீட்டு விழா எப்போது? சன் பிக்சர்ஸ் அதிரடி அறிவிப்பு..!

தனுஷ் நடித்து இயக்கிய 'ராயன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஜூலை 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

டூ பீஸ் உடையில் சன் பாத் எடுத்த பிக்பாஸ் மாயா.. மதுரை சிங்கப் பெண்ணுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

பிக் பாஸ் போட்டியாளர் நடிகை மாயா அட்லாண்டிக் கடலில் சன் பாத் எடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த ஹாட் வீடியோவுக்கு ரசிகர்கள்

'கல்கி 2898 ஏடி' படத்தின் 2 கேரக்டர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்த தமிழ் நடிகர்.. யார் தெரியுமா?

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் இரண்டு கேரக்டர்களுக்கு தமிழ் நடிகர் ஒருவர் டப்பிங் குரல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் நடிகை வீட்டில் திருட்டு.. வேலை செய்த பெண் உள்பட 2 பேர் கைது..!

பிரபல தமிழ் நடிகை வீட்டில் திருடு நடந்ததை எடுத்து அந்த வீட்டில் பணி செய்த பெண் உள்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.