கேக் வெட்டி கொண்டாடிய 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை: என்ன விசேஷம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவர் தனது வீட்டில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகி கேரக்டரில் நடிக்கும் கண்ணம்மா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவரும், கண்ணம்மாவின் ஹவுஸ் ஓனர் கேரக்டரிலும் நடித்திருப்பவர் நடிகை நீபா. இவர் இந்த சீரியலில் சுமதி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும், ஓரளவுக்கு முக்கியத்துவம் பெற்ற கேரக்டர் என்பதால் இவருக்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விஜய் நடித்த காவலன் உள்பட ஒரு சில படங்களிலும், வேறு சில சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நீபா தற்போது புதிய கார் வாங்கி உள்ளதை அடுத்து அதனை கொண்டாடும் வகையில் கேக் வெட்டிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். எங்களுடைய புதிய கார் என்று குறிப்பிட்டுள்ள இந்த புகைப்படமும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments