பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்....! மருத்துவர்கள் கூறியது....?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரதி பாஸ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதி அவர்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாரதி அவர்களுக்கு மூளைக்கு செல்லக்கூடிய ரத்தக்குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறுவை சிகிச்சை செய்யாமல் குணப்படுத்தக்கூடிய நோக்கில் மருத்துவர்கள் முயற்சி செய்து வந்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்தும் வந்துள்ளனர். இதற்கிடையே இந்த தகவல்கள் சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வைரலாக பரவ, ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைந்து திரும்பி வர வேண்டுமே என கடவுளிடம் வேண்டி, பல பதிவுகளை ஷேர் செய்திருந்தனர்.
இந்தநிலையில் பாரதியின் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்செய்தி அவரின் ரசிகப்பெருமக்களுக்கு சந்தோஷத்தை உண்டாக்கியுள்ளது.
தன்னுடைய அழகான தமிழ் பேச்சால் மக்களை கவர்ந்தவர் தான் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர். பெரும்பாலும் சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்ற மேடைகளில், இவர் பேசி கலக்கி வருவார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. அதுவும் சக பேச்சாளர் ராஜா-வின் பேச்சுக்கும், இவருடைய பேச்சுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ படித்த பாரதி, வங்கியில் முக்கியமான பணியில் இருந்துள்ளார். தமிழ் மற்றும் மேடை மீதுள்ள ஆர்வம் காரணமாக பட்டிமன்ற மேடைகளில் தொடர்ந்து பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com