'பரத் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு: த்ரில்லான மோஷன் போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் பரத், தற்போது 50வது படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ‘லவ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பரத் ஜோடியாக வாணிபோஜன் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பரத், வாணிபோஜன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்றின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. சக்திவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைத்து வருகிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் டைட்டில் ‘மிரள்’ என்று வைக்கப்பட்டுள்ளதோடு, மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் த்ரில்லிங்காக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பரத், வாணிபோஜன், கே.எஸ்.ரவிகுமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Happy to release #MIRAL_FirstLook and #MotionPoster of the Slasher thriller - #MIRAL ??
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 1, 2022
Link - https://t.co/uSvUOC4oz5
All the best @nameissakthi and Team@AxessFilm @Dili_AFF @SakthiFilmFctry @sakthivelan_b @bharathhere @vanibhojanoffl @ksravikumardir @itspooranesh @Sethu_Cine
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com