மனைவி, இரட்டை குழந்தைகளுடன் பரத்: வீட்ல என்ன விசேஷம்?

  • IndiaGlitz, [Monday,March 15 2021]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகிய நடிகர் பரத் அதன்பின் ’காதல்’ பட்டியல்’ ’எம் மகன்’ ’வெயில்’ ’நேபாளி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது ’காளிதாஸ்’ உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜெஸ்லே என்ற பெண்ணுடன் பரத்துக்கு திருமணம் நடந்தது. ஜெஸ்லே துபாயை சேர்ந்த ஒரு பல் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பரத்- ஜெஸ்லே தம்பதிக்கு கடந்த 2018ஆம் ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது தனது குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வரும் பரத், தற்போது பரத் தனது மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் கூடிய ஒரு அழகான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி குடும்ப புகைப்படத்தை பரத் பதிவு செய்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.