பரத்-கதிரின் 'என்னோடு விளையாடு' ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Monday,January 16 2017]

பரத் மற்றும் 'மதயானை கூட்டம்' கதிர் நடித்த என்னோடு விளையாடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ரிலீஸ் தேதியை நெருங்கிவிட்டது.

ரொமான்ஸ் மற்றும் த்ரில் படமான இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமக அறிவிக்கப்படவுள்ளது.

பரத், கதிர், சாந்தினி தமிழரசன், சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'என்னோடு' விளையாடு' படத்தை அருண்கிருஷ்ணசாமி இயக்கியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் மோசஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை டொரண்டோ ரீல்ச் மறும் ரெயான் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.